உள்ளே புகுந்து ஜெயலலிதாவை சாகடித்து விட்டார்கள்.? அண்டர்கிரவுண்ட் வேளையில் இறங்கிய மதுசூதனன்..

வழக்கம் போல தமிழச்சி அதிமுகவை அதிர வைக்கும் தனது அடுத்தகட்ட பதிவை வெளியிட்டு விட்டார்.

1488685710-6099இந்த பதிவு முழுக்க முழுக்க பன்னீர்செல்வத்தையும், மதுசூதனனையும் மையமாக கொண்டு நகர்கிறது.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

ஜெயலலிதா கைரேகை குறித்த விசாரணையில், “அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உறுதி அளித்ததன் அடிப்படையில் கைரேகை ஆவணங்களை ஏற்றுக் கொண்டோம்” என தேர்தல் அதிகாரி உச்ச நீதிமன்றம் விசாரணையில் கூறுகிறார்.

அரசு மருத்துவர் பாலாஜி முன்னிலையில் கைரேகை பெறப்பட்டதாகவும் அந்த விசாரணை கூறுகிறது.

கைரேகை பெறப்பட்ட தருணங்களில் அப்போலோ மருத்துவர்கள் இல்லாததும் தமிழக அரசு நியமித்த மருத்துவ குழுவின் தலைமை மருத்துவர் பாலாஜி முன்னிலையில் ஜெயலலிதாவிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும் விசாரணை கூறுகிறது. இதன் மூலம் அப்போலோ மருத்துவர்கள் தப்பிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

“அரசு மருத்துவர் பாலாஜி அக்டோபர் 27 இல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மருத்துவர் பாலாஜியின் விளக்கம் எப்படி இருக்கக்கூடும்?

“ஆமாம், ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்த பொழுதுதான் அவர் கைரேகை வைத்தார்” என்று சொல்லுவார்.

“இதற்கு யார் சாட்சி? உங்களுடன் யார் யார் இருந்தார்கள்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்புவார்களா? இல்லை, ‘நான் மட்டும் தான் இருந்தேன்’ என்றால் மருத்துவர் பாலாஜியின் வாக்குமூலம் உண்மை என்பதை எப்படி நீதிமன்றம் ஏற்கும்? விசாரணையை மேற் கொண்டு எவ்வாறு நீதிமன்றம் முன்னெடுக்கும்?

இது தொடர்பாக ஏன் மதுசூதனனிடம் விசாரணை நடத்தப்படவில்லை?

செப்டம்பர் 25, 2017-இல், மதுசூதனன் பேசியதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

“அப்போலோவில் இருந்த ஜெயலிலதாவை நான் உட்பட யாரையும் பார்க்க விடாமல், சசிகலா குடும்பத்தினர் உள்ளே புகுந்து ஜெயலலிதாவை சாகடித்து விட்டார்கள்” என்று பத்திரிகை பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

இவர் நேரடியாக ஜெயலலிதாவை பார்க்காத போது எதை உறுதி செய்தார்? எதை தேர்தல் ஆணையத்திடம் கூறியதை தேர்தல் ஆணையம் நம்பியது?

சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆன பிறகு செய்த முதல் வேளை, இந்த மதுசூதனனை பிப்ரவரி10, 2017-இல், அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது.

ஓ.பி.எஸ்க்கு தேவையான பல வேலைகளை இவர் பார்த்துள்ளதாக கிடைத்த தகவல்கள் அடிப்படையில் மதுசூதனன் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சசிகலாவால் அறிவிக்கப்பட்டது.

“என்னை கட்சியில் இருந்து நீக்க சசிகலாவிற்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று கூறினார் மதுசூதனன்.

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, பா.ஜ.க வினரின் தீவிர ஓபிஎஸ் ஆதரவு மதுசூதனனுக்கு மேலும் அதிகாரத் திமிரை கொடுத்தது.

ஆகஸ்ட் 28, 2017-இல், “அதிமுக பொதுக் கூட்டம் செப்டம்பர் 12-இல் நடைபெறும் என்றும் அதில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கு அவை தலைவர் பொறுப்பில் மதுசூதனன் இருப்பார்” என்றும் ஓபிஎஸ்_அணி கூறியது.

ஏப்ரல் 12, 2017-இல், ஆர்.கே.நகருக்கு ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக மதுசூதனன் நிறுத்தப்பட்ட போது,

அதிமுக வட சென்னை இளைஞரணி முன்னாள் செயலாளர் பழனி என்பவர், “போலி ஆவணங்களை தயாரித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் ஊழல் செய்திருப்பதாக கூறி ஆவணங்களை சமர்ப்பித்து, மதுசூதனன் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்” என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது ஓ.பி.எஸ் செய்த அத்தனை மோசடிகளுக்கும் மதுசூதனன் உதவியதோடு,

ஜெயலலிதா கைரேகை விசாரணை தொடர்பாக அப்போதைய பொறுப்பு முதல்வராக இருந்த ஓபிஎஸ் பெயர் அடிப்படுவதற்கு பதிலாக அவை தலைவர் பொறுப்பில் இருந்த தனது பெயரை விசாரணைக்கு பரிந்துரை செய்து கொள்வதன் மூலம்,

மேலும் பல சலுகைகளை ஓபிஎஸ் யிடம் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கும் மதுசூதனன் மீது உயர் நீதிமன்றம் தீவிர விசாரணையை முன்னெடுக்காது என்பது அந்த மதுசூதனுக்கே தெரியும்’ என்று கூறியுள்ளார்.