மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் வெடித்த கிளைமோர் குண்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளைமோர் குண்டு வெடித்ததில் பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில்
மன்னாரிற்கும் தலைமன்னாரிற்கும் இடையிலான பிரதான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் குப்பைகளிற்கு தீ வைக்கப்பட்டபோது அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கிளைமோர் வெடித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வீதியினால் பயணித்த போதே பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.