விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மெர்சல் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட இரண்டாயிரத்துக்கும் அதிகமான இணையத்தளங்கள் தயாராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த படம் எதிர்வரும், அக்டோபர் 18ஆம் திகதி தீபாவளி அன்று வெளியாகிறது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடலாம் என்று கணிக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, விஷாலின் துப்பறிவாளன் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.காம் மெர்சல் படத்தையும் வெளியீடு செய்யப்போவதாக எச்சரித்துள்ளது.
இதனால் மெர்சல் குழுவினர் 2,650 இணையத்தளங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.