கடவுளை தேடும் அறிவியல் 10000 வருடங்களுக்கு முந்தைய இரகசியம்!

இப்போதைய உலகம் ஓர் அறிவியல் உலகில் பயணித்துக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. கடவுளின் இருப்பு உண்மையா? பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது தொடர்பிலும் கூட அணுக்களை மோதவிடும் ஹிக்ஸ் போசான் (Higgs Boson) எனும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

29f08-astronomy

ஆனாலும் வியக்கும் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் பல்வேறு விதமான உண்மைகளை மறைத்துக் கொண்டே வருகின்றார்கள்.

உதாரணமாக விமானத்தை கண்டு பிடித்தது யார் என்று ஓர் கேள்வி எழுமாயின் சிறு குழந்தையும் சட்டென ரைட் சகோதரர்கள் என பதில் கூறுவார்கள் இது உண்மையா என்பதே இப்போது அறிவியல் உலகம் கேட்கும் கேள்வி.

ரைட் சகோதரர்களுக்கு முன்னரே அதாவது ரைட் சகோதரர்கள் விமானத்தில் பறந்து காட்டியதாக கூறப்படும் 1903 டிசம்பர் மாதத்திற்கு முதலே, 1903 மே மற்றும் மார்ச் மாதங்களில் நியூசிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸ் எனும் இயந்திரவியலாளர் விமானத்தில் பறந்து காட்டினார்.

ஆனால் அதற்கும் முதல் எகிப்து நாகரீகத்திற்கும் முதல், 10000 தொடக்கம் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே விமானங்கள் உருவாக்கப்பட்டமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதிகாச புராணங்களில் கூறப்படும் கதைகள் போலல்லாமல் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தே உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மனிதன் மாட்டுவண்டியிலும் பயணம் செய்யாத காலத்தில் விமானங்கள் இருந்தனவா?

ஆம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இப்போது மனிதர்கள் பயன்படுத்திவரும் விமானம் போன்று அச்சுஅசலாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே உருவங்கள், சின்னங்கள், ஓவியங்கள் போன்றன எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அப்படி என்றால் அப்போது விமானம் இருந்ததா என்ற கேள்வி எழுவதோடு, அந்த காலகட்டத்தில் மனிதர்கள் அதி உச்ச தொழில் நுட்ப வசதிகளுடன் இருந்து விட்டு அழிந்தார்களா?

அல்லது வேறு எதனையாவது பார்த்துவிட்டு இத்தகைய விமான வடிவங்கள் உருவாக்கப்பட்டனவா என்ற கேள்வியும் எழுந்து விடும். நிச்சயமாக கற்பனையில் இவற்றினை வடிவமைப்பது சாத்தியமல்ல என்பதும் ஒரு வகையில் உண்மை.

அது மட்டுமல்லாமல் மனித நாகரீக வளர்ச்சிக்கு முன்னரே விமான ஓடுதளங்கள் பூமியில் உருவாக்கப்பட்ட சான்றுகள் உள்ளன அவ்வாறெனின் அவற்றை உருவாக்கியவர் யார்? எதற்காக?

இவ்வாறான பல கேள்விகளுக்கு விடைகளை விஞ்ஞானிகளும் சரி ஆய்வாளர்களும் சரி கூறுவதில்லை. இங்கு மிகப்பெரிய சந்தேகம் யாதெனின் உண்மைகள் தெரிந்து கொண்டு மறைக்கப்படுகின்றதா? அல்லது இன்றும் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளனவா என்பதே.