தீபாவளிக்கு நிச்சயம் மெர்சல் வெளியாகும் ; முதல்வர் உறுதி.!

தெறி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படமானது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு குறித்து கதையினைத்தாங்கி வெளிவரவுள்ளதாகவும், மருத்துவ திரையில் நடைபெறுகிற ஊழல்களை அம்பலப்படுத்துகிற வகையிலும் இருந்திடக்கூடுமெனவும் செய்திகள் வெளியாக்கிக்கொண்டிருக்க கூடிய சூழலில், தணிக்கைக்கு திரைப்படம் செல்லவில்லை எனவும் ஒருபுறம் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகின.

Mersal (1)

இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேய்ஸ் சாலையிலுள்ள முதல்வரது இல்லத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜீ ஆகியோரை சந்தித்தார் நடிகர் விஜய்.

மெர்சல் திரைப்படத்தினை எவ்வித தடையுமின்றி வெளியிட உதவக்கோரி சந்தித்ததாக கூறப்படுகிறது. ஏறக்குறைய 2.30 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் முதல்வர் திரைப்படம் வெளியாக உதவுவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.