ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் தேசிய தீபாவளி விழா

2017 ஆம் ஆண்டு தேசிய தீபாவளி விழா இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

625.0.560.320.310.730.053.800.670.160.90 (10)

இம்மாதம் 18 ஆம் திகதி இடம்பெறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தயாராகிவருகின்றனர்.

இதனை முன்னிட்டு அனைத்து இந்துக்களுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சமய அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து விழா நடைபெற்றதுடன், எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன், அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.310.730.053.800.670.160.90 (11) 625.0.560.320.310.730.053.800.670.160.90 (12) 625.0.560.320.310.730.053.800.670.160.90 (13)

625.0.560.320.310.730.053.800.670.160.90 (14)