நாயிற்காக அதன் உரிமையாளர் நீதிமன்றம் சென்று சாதனை படைத்துள்ளார்.இத்தாலி நாட்டில் உள்ள Rome’s La Sapienza என்ற பல்கலைக்கழகத்தில் பெண் ஒருவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் நாயிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அதனை கவனித்துக்கொள்ள இரண்டு நாள் விடுமுறை எடுத்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு இரண்டு நாள் வராததால் அதற்கான ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை எதிர்த்து பெண் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
அதில் ‘இத்தாலி நாட்டு விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, வளர்ப்பு பிராணியை கொடுமைப்படுத்தினாலும் அல்லது அதற்கு உடல்நலம் குன்றியபோது கவனிக்காமல் விட்டாலும், உரிமையாளருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் 10,000 யூரோ அபராதமும் விதிக்கப்படும்’.
இந்த சட்டவிதியை சுட்டிக்காட்டிய பெண் ‘என்னுடைய வளர்ப்பு பிராணியை கவனித்துக்கொள்ளவே இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தேன்.
எனவே, குறைக்கப்பட்ட தனது ஊதியதை திரும்ப வழங்க பல்கலைக்கழத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்ணின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுக் குறித்து வழக்கறிஞர்கள் பேசியபோது, இனி இத்தாலி நாட்டில் வளர்ப்பு பிராணிகளுக்கு உடல்நலம் குன்றினால் அதற்கு சிகிச்சை அளிக்க உரிமையாளர்கள் சட்டப்பூர்வமாக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.