உண்மையில் இதுதான் மெர்சல் பட கதையா? (வைரலான புகைப்படங்கள் உள்ளே)

தளபதி விஜய்யின் மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கிறார் எனவும், எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

Mersal (1)

படத்தின் கதை இதுதான் என பலமுறை இதற்குமுன் செய்திகள் வெளியாகி வைரலாகியுள்ளது. தற்போது தயாரிப்பாளரின் கையெழுத்தோடு மெர்சல் படத்தின் கதைச்சுருக்கம் உள்ள ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

அதில் குறிப்பிட்டுள்ள கதை சுருக்கம் இதுதான்..

மேஜிசியன் வெற்றி(விஜய்1) தன் அண்ணன் டாக்டர் மாறனின் (விஜய்2) பேரை கொண்டு மருத்துவத்துறையில் உள்ள சிலரை கடத்தி கொலை செய்கிறான். வெற்றியை மாறனாக நினைத்து கைது செய்யும் போலீஸ்அதிகாரி ரத்னவேல், வெற்றியிடம் கொலைகளுக்கான காரணத்தை கேட்கிறார். வெற்றி தன் தந்தை வெற்றிமாறனுக்கு கடந்தகாலத்தில் நிகழ்த்த நிகழ்வுகளை கூறுகிறான். வெற்றிமாறன் தளபதியாக தன் சொந்தஊரில் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். ஏழை மக்களுக்கு மருத்துவமனை கட்டிகொடுத்து, அதில் இலவச மருத்துவம் செய்ய டேனியலை(எஸ்.ஜே.சூர்யா) நியமிக்கிறார். வெற்றிமாறனின் இரண்டாவது குழந்தையின் பிரசவத்தின் பணத்திற்காக தவறான முறையில் சிகிச்சை அளிக்க, வெற்றிமாறனின் மனைவி இறக்கிறாள். இதை அறிந்து கொண்டு கேட்கும் வெற்றிமாறனை டேனியல் அடித்துகொல்கிறான்.

சிறுவனாக இருக்கும் மாறனுக்கு தலையில் அடிபட்டு சிறுவயது ஞாபகங்கள் மறக்கிறது. பின்னர் மாறனுக்கு வெற்றி மூலம் உண்மைகள் தெரியவருகிறது. இருவரும் இணைந்து டேனியலை கொல்கின்றனர். இறுதியில் வெற்றி சிறைக்கு செல்கிறான், மாறன் இந்தியமருத்துவ கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறான்.

625.0.560.320.100.600.053.800.720.160.90 (1) 625.0.560.320.100.600.053.800.720.160.90 (2)