விஜய்யுடன் கனவு நிறைவேறிவிட்டது, அடுத்து தல தானா?- மெர்சல் தயாரிப்பாளர்

விஜய்யின் மெர்சல் படத்தை மிகவும் பிரம்மாண்ட தயாரித்திருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். படம் ரிலீசுக்கு நெருங்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர் ஹேமா ருக்மிணி ஒரு பக்கம் படம் குறித்து பிஸியாக பேட்டி கொடுத்து வருகிறார்.

DCGYz_DUMAArwmA

படம் பற்றி அவர் பேசும்போது, படத்தில் விஜய்யின் எல்லா போஷனும் நன்றாக இருக்கும். மூன்று நாயகிகளுக்கு வித்தியாசமான முக்கிய வேடங்கள். இதுவரை விஜய், வடிவேலு காமினேஷனில் வந்த காமெடி சீன்கள் போல இதிலும் நிறைய காட்சிகள் இருக்கிறது.

விஜய்யுடன் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது, அடுத்த தல தான். இப்போதைக்கு கனவு மட்டுமே காண முடியும், அஜித் ஓகே சொன்னால் கண்டிப்பாக தயாரிக்க நாங்கள் ரெடி என கூறியுள்ளார்.