யாழில் 9 வயது சிறுமி பரிதாபமாக மரணம் – சோகத்தில் குடும்பத்தினர்

யாழ்ப்பாணத்தில் சுகவீனம் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide-man_Kill-Death-Dead-Bodyயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது வயதான கே. சரா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் யாழ் புனித ஜோன் போஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார்.

கடந்த சில நாட்களாக டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த சரா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து காணப்பட்டதால், தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்கு அன்றைய தினமே உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுமியின் உயிரிழப்பால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.