உலக வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
‘முயற்சிக்கு உறுதுணை விழிகள்’ என்ற அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர்களுக்கான இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 28 வயதுடைய ரேகா என்ற பார்வையற்ற பெண் தொடர்ந்து இடைவிடாது 12 மணி நேரம் (காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை) சுமார் 160 தமிழ் சினிமா பாடல்களை மனப்பாடமாக பாடி அசத்தினார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த சக பார்வையற்ற மாணவிகள் மற்றும் பெண்கள் ரேகாவை ஒவ்வொரு பாடல் முடிவிலும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை பார்வையிட்ட 2 பேர் கொண்ட நடுவர் குழு அதனை வீடியோவாக பதிவு செய்து, பார்வையற்ற பெண்ணின் சாதனை முயற்சியை லிம்கா புத்தக சாதனைக்காக அனுப்பி வைத்தது.