யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய தமிழ் மொழித் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார்.
இதன்போது மாணவர்களுடன் சேர்ந்து புகைபடம் எடுத்துக் கொண்டார்.
மாணவர்கள் கூட்டமாக நின்று அரச தலைவருக்குக் கைலாகு கொடுத்து குழுப் படங்களும் எடுத்துக் கொண்டனர்.
தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்வு முடிந்து மண்டபத்தை விட்டு அவர் வெளியே வந்தார். பாடசாலை மாணவர்கள் அவரை வழியனுப்ப இரு வரிசையாக நின்றிருந்தனர்.
ஜனாதிபதியை கண்டதும் ‘சேர் சேர், செல்பி’ என்று கத்தினர். ஜனாதிபதியும் மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
பாதுகாப்பு பிரிவின் கெடுபிடிகளைத் தாண்டியும் மாணவ, மாணவிகள் ஜனாதிபதியுடன் நெருங்கி தாராளமாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
சில மாணவர்கள் கூட்டமாக நின்று ஜனாதிபதியுடன் ஒளிப்படமும் எடுத்துக் கொண்டனர். மாணவர்களின் விருப்பத்தை உதாசீனப்படுத்தாமல் அவரும் தாராளமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.