6 மாதத்திற்கு மேலாகியும் விடுதலைச்செய்யப்படாத பிள்ளையான் இந்த அரசாங்கத்தின்மேல் சந்தேகம் – கருணா

நான் போராட்ட காலத்தில் தலைமறைவாகி இருந்தேன் என்பது உண்மை என்ற போதிலும் சட்டத்திற்கு முரணான பிரதேசத்திலோ, நாடுகளிலோ இருக்கவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கல்லடியில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

151011132831_pillayan_karuna_512x288_bbc_nocreditவடக்கு, கிழக்கு இணைப்பு என்பது எமது கட்சி அடிப்படை கொள்கையாக வைத்து இருக்கின்றோம். அது கட்டாயம் இணைக்க படவேண்டும். இதில் எந்தவிதமான மாற்று கருத்திற்கும் இடமில்லை.

ஆனால் சிலர் கேட்க முடியும் ஏன் கருணா அமைச்சராக இருக்கும் போது இதை பேசவில்லை என்று.

அதனால்தான் எனது பதவியை தூக்கி எறிந்து விட்டு வந்து எமது தமிழர்களின் நலனுக்காகவும் வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்பதற்காகவும் கட்சி தொடங்கியுள்ளேன்.

இருந்தாலும், கிழக்கு மாகாணம் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்று கொள்கின்றேன். ஏன் என்றால் வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தை தரமுயர்த்த வேண்டும் என்பது எனது கோரிக்கை.

வட மாகாணத்தை ஒப்பிடுகின்ற போது கல்வியிலும், பொருளாதாரத்திலும் எமது கிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது. வடக்கில் வாழும் பெரும் பான்மை மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தை ஒப்பிடுகின்றபோது 2 வீதமான மக்களே புலம்பெயர்ந்துள்ளனர்.

சிவநேசதுறை சந்திரகாந்தன், ஜோசப் பரராஜ சிங்கம் படுகொலை தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகள் தற்போது நடந்து வந்துகொண்டு இருக்கின்றது. விசாரணை முடியும் வரை எதுவும் கூறுவது சிறந்தது அல்ல. காரணம் தற்போது நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று கொண்டு வருகின்றது.

நீதிமன்றம் உண்மையில் அதை பரிசீலிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இருந்தாலும் இலங்கையின் சட்டத்தின் படி ஒரு கொலை குற்றத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டால் ஆறு மாதங்களின் பின்பு பிணையில் செல்ல வேண்டும்.

ஆனாலும் இதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் சிவநேசதுறை சந்திரகாந்தன் நீண்ட காலம் சிறையில் இருக்கிறார் என சுட்டிக்காட்டியுள்ளார்.