கொஸ்லந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமினாகந்த வனப்பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்ட விரோதமாக அரை ஏக்கர் சேனையொன்றில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கஞ்சா சேனையில் நன்கு வளர்ந்திருந்த சுமார் 9 அடி உயரமான 5 ஆயிரத்துக்கும் அதிகமான கஞ்சா செடிகளை கைப்பற்றியதோடு அதன்பின்னர் அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலஹருவ, அளுத்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்றைய தினம் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் கொஸ்லந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுனில் தயாசிறி தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று ந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுனில் தயாசிறி தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.