நாமல்லின் நாகரீகமற்ற செயற்பாடு! ராஜபக்ஷ குடும்பத்திற்குள் பூகம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நாகரீகமற்ற செயற்பாடு குறித்து சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Namal_Rajapaksa-720x480முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் சுமதாஸ அபேகுணவர்தன, தகாத வார்த்தைகளால் நாமல் திட்டியதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மஹிந்தவின் ஆஸ்தான சோதிடர் சுமதாஸ அபேகுணவர்தன அண்மையில் தேசிய ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் சிலவற்றில் ஆருடம் வெளியிட்டிருந்தார்.

ராஜபக்ச குடும்பத்தில் இதுவரை அரசியலுக்கு வராத ஒருவரே அடுத்த அரசியலின் பிரபல கதாபாத்திரமாக மாறுவார் என சுமனதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த நாமல் ராஜபக்ச, தொலைபேசி ஊடாக சோதிடரை தொடர்புகொண்டு திட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எங்களை ஏமாற்றி விட்டீர்கள். மீண்டும் ஏமாற்றும் வேலையை செய்ய வேண்டாம். கோத்தபாயவை தூண்டி விடும் வேலையை செய்து கொண்டிருக்கின்றீர்கள். வயதான உங்களை என்ன செய்கின்றேன் பாருங்கள் என தகாத வார்த்தைகளை பயன்படுத்தி நாமல் சுமனதாஸவை திட்டியுள்ளார்.

வயதை கூட மதிக்காமல் நாமல் திட்டுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த சுமனதாஸ “அதிகம் கூச்சலிடாதீர்கள் நாமல் பேபீ. அந்த கோப்பில் என்னிடம் பல விடயங்கள் உள்ளது.” என சுமனதாஸ குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் ஒரு வார்த்தையேனும் பேசாமல் நாமல் தொலைபேசியை துண்டித்துள்ளார்.

அதற்கு அடுத்த நாள் சுமனதாஸவுக்கு அழைப்பேற்படுத்திய மஹிந்த, “என்ன சுமனே இந்த பக்கம் வருவதே இல்லை. என்ன நடந்தது?” என கேட்டுள்ளார்.. “நாமல் பேபீ பேசுவதனை கேட்டால் அந்த பக்கம் எப்படி வருவது? என கூறிய சுமனதாஸ சம்பவத்தை மஹிந்தவிடம் அவர் விபரித்துள்ளார்.

அவரை கண்டு கொள்ள வேண்டாம்.. இளம் பருவம் அப்படி தான். அவருக்கு கோபம் வந்தால் வாயில் வருவதை பேசிவிடுவார் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

நாமலை வேறு நாட்டிற்கு அனுப்பி விடுங்கள் இல்லை என்றால் அரசியல் செய்ய முடியாது. இப்படியே சென்றால், அவருக்கு சிறையிலேயே இருக்க நேரிடும். குடியுரிமையும் இரத்து செய்யப்படலாம் என சுமனதாஸ குறிப்பிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.