மதுபோதையில் சென்ற ஆசிரியர் பொலிசாரால் கைது!

பொலிஸாரின் அனுமதியை மீறி சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று சோதனையிட்டபோது, குறித்த நபர் ஆசிரியரெனலும் அவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதுடன் அவரிடம் அனுமதிப்பத்திரம் இல்லையென்பதால் அவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

129fff03-ac9c-403e-8658-d092775ed944இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சை நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில் தொழிநுட்பப்பிரிவிலுள்ள பொருட்களுக்குப் பொறுப்பாக ஆசிரியரொருவர் கடமையாற்றியாற்றியுள்ளார்.

பாடசாலையிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சிந்தாமணி ஆலயத்திற்கு முன்பாக கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிசார் சோதனை மேற்கொள்வதற்கு வழிமறித்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

இதையடுத்து பொலிசார் குறித்த ஆசிரியரை துரத்திச் சென்று சற்றுத்தூரத்தில் வைத்து வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது அவர் மது போதையில் காணப்பட்டுள்ளதுடன் சாரதி அனுமதிப்பத்திரம் அவரிடம் இருக்கவில்லை என்பது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரைக்கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு நேற்று மாலை  வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது, பதில் நீதிவான் குறித்த ஆசிரியரை ஒரு நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் இன்றைய தினம் வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் அப்பாடசாலையின் அபிவிருத்திச்சங்க பொருளாளராகவும் இருந்து வருகின்றார். இது குறித்து பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் சட்டத்தரணியுடன் தொடர்புகொண்டபோது தற்போது அவர் சட்ட நடவடிக்கைக்குட்பட்டுத்தப்பட்டுள்ளார். தற்போது நான் கருத்து எதுவும் கூற முடியாது குறித்த ஆசிரியர் மதுபோதையில் அபிவிருத்திச்சங்க கூட்டத்திற்கு வருவது தொடர்பாக நான் அபிவிருத்திச்சங்க கூட்டத்தில் முறையிட்டுள்ளேன்.

என்னிடம் பலர் தொலைபேசி அழைப்பினூடாகவே இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளனர். சட்ட நடவடிக்கையின் பின்னர் பாடசாலை அபிவிருத்திச்சங்க கூட்டத்திற்கு வரும்போது தான் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்வதா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பொலிசார் குறித்த ஆசிரியரை நேற்றுக் காலை 10.30 மணியளவில் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.