அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து பேசிய பாடசாலை மாணவி தொடர்பில் பல செய்திகள் வெளிவந்திருந்தன.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இதில், பதுளையைச் சேர்ந்த 7 வயதான அமானி ராய்தா என்ற சிறுமியே ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பில் குறித்த சிறுமி சிங்கள மொழியில் சரளமாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தார்.
ஆனால், இந்தச் சிறுமி ஒரு தமிழ் சிறுமி எனவும், பதுளையைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த சிறுமி எனவும் சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் ‘உங்களால் கொடுக்க முடிந்த சிறிய நேரமே மிகப்பெரிய பரிசு, நான் சிறிது நேரம் அமனி ராய்தாவுடன் பேசினேன். என குறித்த நெகிழ்ச்சியான காணொளியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் சிங்கள மொழியை அதிகம் கற்பது இல்லை. ஆனால் வடக்கு கிழக்கைத்தவிர்ந்த ஏனைய இடங்களில் உள்ள சிறுவர்கள் சிங்களத்தை இலகுவாக கற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தமிழ் சிறுமி ஜனாதிபதியிடம் சரளமாக சிங்களத்தில் பேசி உரையாடும் குறித்த காணொளி வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.