ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் மூன்று இளம் பெண்களுக்கு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கொழும்பு கொலன்னாவ சாலமுல்ல பிரதேசத்தில் உடை வாங்கச் சென்ற மூன்று இளம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதினைந்து வயதான யசாந்தி மதுசானி, பதினான்கு வயதுடைய சஜித்ரா மற்றும் மாலிதி வத்சலா பெரேரா எனும் திருமணமான பெண் ஆகியோரே காணாமல் போயுள்ளனர். மாலிதி வத்சலா பெரேரா என்ற பெண்ணுக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த பதினான்காம் திகதி சனிக்கிழமையன்று உடை வாங்க கடைக்குச் சென்றவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமல் போன பெண்களில் ஒருவரான யசாந்தி மதுசானியின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும், குறித்த அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்களை யாரேனும் கடத்தி இருக்கக்கூடும் என பெண்களின் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டதுடன் அவர்கள் மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.