முல்லைத்தீவு பெருங்காட்டுப்பகுதியில் அபாயகரமான பொருட்கள்: பீதியில் மக்கள்

59e552d603a84-IBCTAMIL

முல்லைத்தீவு பெருங்காட்டுப்பகுதியில் அபயகரமான இராணுவ வெடிபொருட்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுப்பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் இறுதி யுத்தத்தின் போது இந்த பகுதியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்றை வைத்திருந்திருந்திருக்காலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

59e552d66494a-IBCTAMIL

இதே வேளை குறித்த காட்டடுப்பகுதியில் இருந்து வவுனியா நெடுங்கேணி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு கனரக வாகனங்களின் ஊடக வெடிபொருட்களை கொண்டு செல்லக்கூடிய தரைவழிப்பாதைளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் யுத்தகாலத்தில் அந்த இடத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தற்பொழுது; அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்படும் அபயகரமான வெடிபொருள் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

59e552d6445ff-IBCTAMIL