முல்லைத்தீவு-மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வறட்சி நிவாரணம் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மாவட்டச் செயலகத்தின் ஊடாக வறட்சி நிவாரண அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்காக பாதிக்கப்பட்ட பொதுமக்களை கிராம சேவையாளர்கள் பொது வேலைகளில் அமர்த்தியிருந்தனர்.
இந்த நிலையிலும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இன்னமும் முற்றும்முழுதாக நிவாரணங்கள் வழங்கி முடிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது