பிலிப்பைன்ஸில் மூழ்கிய சரக்குக்கப்பல்: தமிழக இளைஞரை மீது தர கோரிக்கை

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சோலபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மூத்த மகன் கிரிதர் குமார்(25). கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் உள்ள அட்மிரல் மரைன் நிறுவனத்தில் 3-ஆம் நிலை அதிகாரியாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

59e558ac396f7-IBCTAMIL

கடந்த வாரம் இந்தோனேசியாவில் இருந்து சீனாவிற்கு கிரிதர் குமாருடன் சேர்ந்து 26 பேர் களிமண் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். பிலிப்பின்ஸ் அருகே சென்றுகொண்டிருந்த இக்கப்பல் அக்டோபர் 13-ஆம் தேதி கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அதில் 15 ஊழியர்கள் மீட்கப்பட்டதாகவும், 11 பேர் மாயமானதாகவும் தெரிகிறது.

மாயமான 11 பேரில் கிரிதர்குமாரும் ஒருவராவார். சம்பவம் குறித்து கப்பல் நிறுவனத்திடம் இருந்து சோலபாளையத்தில் உள்ள கிரிதர்குமாரின் தந்தை சுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சுப்பிரமணியம் குடும்பத்தினர் கிரிதர்குமார் குறித்து விசாரிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.