பாகிஸ்தானுடன் முதலாவது அரசியல் பேச்சுக்களை நடத்துகிறது மைத்திரி அரசு

பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர் தெஹ்மினா ஜன்ஜூவா இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா- பாகிஸ்தான் இடையிலான ஐந்தாவது சுற்று அரசியல் கலந்துரையாடல்களில் பங்கேற்கவே இவர் கொழும்பு வரவுள்ளார்.

download (31)

நான்காவது சுற்றுப் பேச்சுக்கள், 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஐந்தாவது சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பாகிஸ்தானுடன் இடம்பெறும் முதலாவது அரசியல் கலந்துரையாடல் இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள், குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன், பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர் ஆழமான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.