ஹலிவக்சை சேர்ந்த லின்ட்சி ஹப்லி பிரசவத்திற்கு நான்கு நாட்களின் பின்னர் சதை-உண்ணும் நோயினால் பாதிக்கப்பட்ட துயர சம்வம் இடம்பெற்றுள்ளது.
உறுப்புக்களை இழந்து, மொத்தமாக கருப்பை அகற்றப்பட்டு அத்துடன் அவரது மகனின் முதல் ஏழு மாத காலத்தை வைத்தியசாலையில் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலைமைக்கு தன்னை ஆளாக்கிய ஹலிவக்ஸ் IWK Health Centre மற்றும் ஹலிவக்ஸ்-பகுதியை சேர்ந்த வைத்தியர்களை-பிரசவத்தின் போதும் அறுவை சிகிச்சையின் பின்னரான கவனத்தின் போதும் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி இவர்களிற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
இத்தகைய தவறுகள் நடந்தும் இவர் பிழைத்துள்ளது அதிஷ்டம் என இவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
33-வயது ஹப்லெ மார்ச் 2ல் இவரது மகனை பிரசவித்தார். வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒரு நாளின் பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டுள்ளார். நெக்ரோடைசிங் திசுப்படல அழற்சி எனப்படும் சதை-உண்ணும் நோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிக்கப்பட்டது.கருப்பையில் இருந்து பிறப்புறுப்பிற்கு வரும் பாதை வாயில் தைக்கப்படாது விடப்பட்டதாலும், பிரசவத்தின் போது நச்சுக்கொடியின் ஒரு பகுதி அகற்றப்படாததாலும் சுகாதார சிக்கல்கள் ஏற்பட்டதென இவரது வழக்கறிஞர் றே வாக்னர் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்ச் 5 வயிற்று வலி என இவர் வைத்தியசாலைக்கு சென்ற போதும் இவருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளதென கூறி வீட்டிற்கு திருப்பி அனுப்பபட்டார்.வைத்தியசாலையில் இருக்கும் போதே சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் சேதத்தின் கணிசமான பகுதி தடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மீண்டும் இவர் வைத்தியசாலைக்கு சென்று போதுதான் இவருக்கு சதை-உண்ணும் நோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன-முழங்கை முழங்கால்களிற்கு கீழே உள்ள பகுதிகள் அகற்றப்பட்டதுடன் மொத்த கருப்பையும் அகற்றப்பட்டது.இது குறித்து வைத்தியசாலை எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை.