தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது : பாஜக தலைவர் கருத்தால் வலுக்கும் சர்ச்சை

ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒரு அரசியல்வாதி, தாஜ்மஹால், `இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு கறை` என்றும், அதை `துரோகிகள் கட்டினர்` எனவும் கூறியுள்ளார்.

download (32)

உத்திரபிரதேசத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த சங்கீத் சோம், மீரட் நகரில் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.

உத்தர பிரதேசத்தின் சுற்றுலா தலங்கள் குறித்த கையேடுகளில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்ட பின்பு வருகின்ற கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும், இணையத்தில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திங்களன்று, `தாஜ்மஹால்` என்ற வார்த்தையே இணையத்தில் அதிகம் பேசப்பட்டது.

  • `பட்டியலில் இருந்து, தாஜ்மஹாலின் பெயர் நீக்கப்பட்டது பலருக்கு மனவேதனை அளித்துள்ளது` என்று ஞாயிறன்று சோம் பேசினார்.

`தாஜ்மஹாலை கட்டியவர், தனது தந்தையையே சிறையில் அடைத்தார் என்பது தான் வரலாறா?`

`உத்தர பிரதேசம் மற்றும் ஹிந்துஸ்தாலின் இருந்த பல இந்துக்கள், தாஜ்மஹாலை கட்டியவரின் இலக்காக இருந்தார்கள் என்பது தான் வரலாறா?`

`இது தான் வரலாறு என்றால், அது மிகவும் துரதிருஷ்டவசமானது, அதை நாம் மாற்றுவோம் என நான் உறுதியளிக்கிறேன்.`

1643 ஆம் ஆண்டு, தனக்கு மிகவும் விருப்பமான மனைவியின் நினைவாக தாஜமஹாலை கட்டிய ஷா ஜகான் என்னும் முகலாய அரசர், தனது தந்தையை சிறையில் வைக்கவில்லை. அவரின் மகன் ஔரங்கசிப்தான் அவரை சாகும்வரை சிறையில் வைத்தார்.

`வரலாறு அழிக்கப்படாது`

சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய வரலாறு சோமிற்கு உள்ளது. 2013ஆம் ஆண்டு, முசாஃபர்நகரில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்தில், 62 பேர் கொல்லப்பட்டனர். அதில், பதற்றத்தை தூண்டியதாக அவர் இதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பாஜகவின் செய்தி தொடர்பாளர் நலின் கோலி, சங்கீத் சோமின் கருத்துக்களில் இருந்து கட்சியை விலக்கிகொண்டுள்ளார்.

`அது அவரின் தனிப்பட்ட பார்வை` என்று அவர் என்.டி.டி.வியிடம் தெரிவித்துள்ளார்.

`வரலாற்றில் என்ன நடந்ததோ அதை அழிக்கவே முடியாது. ஆனால், அவற்றை இன்னும் சிறப்பாக எழுத முடியும்`.

சமூக வலைதளங்களில், தாஜ்மஹாலிற்கு ஆதரவாக பலர் பேசியுள்ளனர்.

t1

2.8 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட, ஊடகவியலாளரான விக்ரம் சந்திரா, `யார் ஒருவர் தாஜ்மஹாலை, `கலாசாரத்தின் கறை` என்று கூறுகிறார்களோ, அவர்கள் மிக தெளிவாக தனது சுயபுத்தியை இழந்துவிட்டனர்` என்று பதிவிட்டுள்ளார்

அதேபோல, சிலர் சோமிற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

தாஜ்மஹால், சர்ச்சைக்குறிய சின்னமாக சில இந்துக்களுக்கு உள்ளது.

உத்தர பிரதேச முதல்வரும், இந்து தேசியவாதியுமான யோகி ஆதித்யநாத் , கடந்த ஜூன் மாதம், தாஜ்மஹால், `இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தவில்லை` என்றார்.