தமிழரின் ஒப்பற்ற பிரமாண்டமான தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டும்தான் என்று தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியுள்ளார்.
தமிழகத்தின் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக சரியான முறையில் குரல் கொடுக்கவில்லை என்றும் தமிழ் நாட்டில் தமிழர்கள் குறைவு என்றும் அவர் அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.
ஒன்றுமே இல்லாது ஒரு தனி மனிதனாக நாலு பேரைச் சேர்த்து அதை நானூறாக்கி நானூறை நாலாயிரமாக்கி மிக பிரமாண்டமான ஒரு போராளியாக நின்றது பிரபாகரன் மட்டும் தான் என்று அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஈழத்தின் பிரச்சினைகளை மையமாக்கி படம் ஒன்று ஆக்கவேண்டும் என்றும் அது தனது கையாலேயே நடைபெறவேண்டும் என்றும் தலைவர் பிரபாகரன் அவர்கள் விரும்பியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்காக உண்மையாகவே போராடி புறநான்னூற்றில் அகநானூற்றில் நாம் கண்ட வீரர்களை இந்த நூற்றாண்டில் செயல் வடிவில் காட்டியவர் பிரபாகரன் ஒருவர்தான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்ட விடையங்களினை காணொளி வடிவில் இங்கே இணைக்கின்றோம்…