சிங்கப்பூரில் கடவுளாக செயற்பட்ட இலங்கை பெண்!

சிங்கப்பூரில் மகத்தான பணியாற்றிய இலங்கை பெண்ணொருவரை அந்நாட்டு அரசாங்கம் கௌரவித்துள்ளது.

வருடாந்தம் வழங்கப்படும் உள்நாட்டு தொழிலாளி விருதினை இலங்கை பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

Capturesdzreuxஇலங்கையை சேர்ந்த ஜயவர்தன முதியன்செலாகே சித்தம்மா ஜயவர்தன என்பவரே இந்த விருதினை பெற்றுள்ளார். இவருக்கு 2,000 டொலர் பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

60 வயதான சித்தம்மா 1997ஆம் ஆண்டில் இருந்து கடந்த வருடம் வரை சிறந்த பணியாளராக செயற்பட்டுள்ளார்.

அவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணை குளிப்பாட்டி விடுவார், சிறுநீர் வடிகுழாய்களை மாற்றுவார், மூக்கு குழாய் வழியாக ஒவ்வொரு மணி நேரமும் உணவளிப்பார், மருந்துகளை நிர்வகித்துக் கொள்ளவும், மேலும் அவருக்கு முடியும் வெட்டிவிடுவார்.

“இலங்கை பெண்ணுக்கு என்றும் நாங்கள் நன்றியுடன் இருப்போம். எனது மனைவிக்கும் எங்கள் குடும்பத்திற்காக அவர் நிறைய உதவியுள்ளனர். பல வருடங்களாக அவர் எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே மாறியுள்ளார்” என அவருக்கு பணி வழங்கிய 76 வயதுடைய, Chua Choo Hock தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையினை இலங்கையில் உள்ள 100 வயதுடைய பெண்ணுக்கு வழங்குவதற்காக அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.