ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடி – மன்னார் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து ஒரு மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் மன்னார் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.