குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், பன்மைத்துவ கலாசாரத்துக்கு மதிப்பு கொடுப்பவர். அவர், தொடர்ச்சியாக இந்திய மற்றும் தமிழகப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில், கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.

1_11000 (1)இந்தக் கொண்டாட்டத்தின்போது, கனடாவுக்கான இந்தியத் தூதர் விகாஸ் ஸ்வரரூப் உடனிருந்தார். இதுகுறித்து ட்ரூட், ‘தீபாவளி வாழ்த்துகள். நாங்கள் இன்றிரவு தீபாவளியை ஒட்டாவாவில் கொண்டாடுகிறோம்’ என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தீபாவளியைக் கொண்டாடும் நோக்கில், கடந்த மாதம் இந்திய அஞ்சலகமும் கனடாவின் அஞ்சலகமும் இணைந்து இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.