-
மேஷம்
மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். வியாபா ரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
-
கடகம்
கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். அரசால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அனுப வமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.
-
கன்னி
கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வை யிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
-
துலாம்
துலாம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்பு டன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். உங்களால் வளர்ச்சிய டைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
-
தனுசு
தனுசு: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.
-
மகரம்
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
கும்பம்
கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
-
மீனம்
மீனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர் கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சி களை அதிகாரி பாராட்டுவார். திறமைகள் வெளிப்படும் நாள்.