15வயது சிறுமியின் 23 வார கரு அகற்றம்… நீண்ட தவிப்புக்கு பிறகு சுதந்திரம்

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியின் 23 வார கருவை மருத்துவர்கள் பாதுகாப்பாக அகற்றினர். ஜார்க்கண்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சிறுமியின் கருகலைப்பு சாதியமாகியுள்ளது. ஜம்ஷத்பூரை சேர்ந்த சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினரால் கொடூரமாக முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார். சிறுமியின் பெற்றோர் தந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உறவினரை கைது செய்தனர்.

pregnancy2707600fஇதையடுத்து சிறுமியின் வயிற்றில் கரு உருவானது. சிறுமியின் கருவை கலைக்க அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளை நாடினர். இருப்பினும் நேரம் கடந்துவிட்டதால கருகலைப்பு செய்தால் சிறுமியின் உயிருக்கே ஆபத்து என கூறி மருத்துவர்கள் கருகலைப்பு செய்ய மறுத்துவிட்டனர். இதனிடையே உயர்நீதிமன்றத்தை நாடிய சிறுமியின் பெற்றோர் கருகலைப்பு செய்வதற்கான ஆணையை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கருகலைப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமி பாதுகாப்பாக இருப்பதாகவும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு பிறகு வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.