இங்கிலாந்து நாட்டின் இளம் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது இளம் தொழில் அதிபர் அக்ஷய் ரூபரேலியாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இவர் ஒன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து முன்னணி தொழில் அதிபராக வளர்ந்து வருகிறார்.
இவரது தற்போதைய சொத்து மதிப்பு 12 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.103 கோடியே 20 லட்சம்) ஆகும்.
இவர் வெறும் 7 ஆயிரம் பவுண்ட் கொண்டும், 12 ஊழியர்களை அமர்த்தியும் தனது ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கியவர் ஆவார்.
முதலில் தனது தொழில் உதவிக்கு கால் சென்டர் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
இவரது பெற்றோர் கவுசிக், ரேணுகா இருவருக்கும் காது கேட்கும் திறன் கிடையாது.
இந்தப் பெற்றோருக்கு தங்கள் மகன் இளம் வயதில் தொழில் அதிபராக உருவாகி, இளம்பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாம்.
உலகின் தலைசிறந்த ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்த போதும் அக்ஷய் அதை நிறுத்தி வைத்துவிட்டு, தொழிலில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுவரையில் இவர் 10 கோடி பவுண்ட் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்துள்ளார்.