மேல்நோக்கி பாயும் அருவி: சீனாவில் அரங்கேறிய அதிசயம்!

சீனாவில் கனூன் புயலால் அருவி ஒன்று ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

சீன கடற்பகுதியில் உருவான கனூன் புயல் நேற்று அதிகாலை குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்தது.

மேல்நோக்கி பாயும் அருவி: சீனாவில் அரங்கேறிய அதிசயம்!

இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

சீனாவில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், மற்றும் நீளம் ஆகிய வண்ணங்களை கொண்டு காலநிலைகளை வரையறுக்கப்படுவது வழக்கம்.

மிகவும் மோசமான நிலையை சிவப்பு நிறம் குறிக்கும்.

மேல்நோக்கி பாயும் அருவி: சீனாவில் அரங்கேறிய அதிசயம்!

இரண்டாவது மோசமான நிலையை ஆரஞ்சு நிறம் குறிக்கும். இந்நிலையில் மோசமான நிலையை குறிக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை சீன வானிலை மையம் கடந்த ஞாயிற்றுக் கிழமை விடுத்தது.
இந்நிலையில் நேற்று புயல் கரையை கடந்துள்ளது.

இந்நிலையில் தைவான் மலைப்பகுதியில் கனூன் புயல் காரணமாக அருவி ஒன்று உருவானது.
ஆனால் அந்த அருவி வழக்கம்போல் கீழ்நோக்கி கொட்டாமல் ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாய்ந்தது.

மேல்நோக்கி பாயும் அருவி: சீனாவில் அரங்கேறிய அதிசயம்!

இந்த போட்டோ வெளியாகியுள்ளது.

இருப்பினும் புவியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து அருவிகள் மேல் நோக்கி பாய்வது இது முதல் தடவையல்ல.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு இதுபோல் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. .