வழக்கத்துக்கு மாறாக நேற்றையதினம் இலண்டனின் சில பகுதிகளில் சிவப்பு நிறச் சூரியனையும், மழை மேகங்கள் எதுவும் இன்றித் திடீரென கறுத்த வானத்தையும் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து பரபரப்புத் தொற்றிக்கொள்ளவே, அந்தச் சூழலைப் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரிமாறத் தொடங்கினர்.
எவ்வாறெனினும், இலண்டன் வானிலை அவதான நிலையம் உடனடியாக இந்த விசித்திர சூழல் குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிட்டது.
தெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய ஒபீலியா புயலில் கிளம்பிய தூசுப் படலம் மற்றும் சிதைவுத் துணுக்குகள் என்பனவே இந்தத் திடீர் ‘காட்சி மாற்றத்’துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.