களவாணிப் பெண்கள் செய்த மோசமான காரியம்

வவுனியா பேருந்து ஒன்றில் கூட்டுக்களவாணி முறையில் கொள்ளையிட்ட குருநாகல் பெண்கள் தொடர்பாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

களவாணிப் பெண்கள் செய்த மோசமான காரியம்; கதறித்துடித்து கத்திய பெண்!

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

சாளம்பைக் குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த ஜெயக்குமார் லலிதா என்ற பெண்ணின் 15 ஆயிரம் ரூபா பணம் திடீரென்று பறிபோனமையையிட்டு அவர் பதறித்துடித்து அழுதுள்ளார்.

இதன்பின்னர் அவரைச் சுற்றி நின்ற பெண்கள்தான் பணத்தை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியமையடுத்து குறித்த கூட்டுக் களவாணிகள் தாம் கொள்ளையடித்த பணத்தினை மீளக் கையளித்துள்ளனர்.

நடந்தது என்ன?

வவுனியா மாவட்டம் நெடுக்குளத்தில் குறித்த தனியார் பேருந்தில் ஆறு பெண்கள் ஏறியுள்ளனர். அவர்கள் ஒரு லலிதாவைச் சுற்றி மிக நெருக்கமாக நின்றுள்ளனர். பின்னர் குருமன்காடு என்ற இடம் வரவும் அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் இறங்கியுள்ளனர். குறித்த பெண்கள் குழுவால் நெருக்கமாகச் சுற்றிவளைக்கப்பட்டிருந்த லலிதா தனது கைப்பையைப் பார்த்தபோது அது திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனால் பதறித்துடித்து அழுது கதறிய லலிதா, தனது பணத்தைக் களவாடியவர்கள் அந்தப் பெண்கள்தான் எனக் குற்றம்சாட்டியுள்ளார். இதன்பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சம்மந்தப்பட்ட ஏழு பேரையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

இதற்கிடையில் பணம் திருடிய பெண்களுக்கும் பறிகொடுத்த லலிதாவுக்குமிடையில் பேரம்பேசல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது சுருட்டிய பணத்தை மீளக்கையளித்தால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யமாட்டேன் என்று பறிகொடுத்த பெண் உறுதியளித்துள்ளார்.

இதற்கு உடன்பட்ட குறித்த களவாணிக் குழு அவரது பணத்தை மீளக் கொடுத்ததனால் பாதிக்கப்பட்ட லலிதா முறைப்பாடு செய்வதிலிருந்து பின்வாங்கினார். பாதிக்கப்பட்ட பெண் இவ்வாறு பின்வாங்கியதால் தம்மால் ஆதாரமின்றி எதுவும் செய்யமுடியாதெனக்கூறி பொலிஸார் குறித்த களவாணிக் கும்பலை விசாரணைகள் ஏதுமின்றி விடுதலை செய்தனர்.

குறித்த களவாணிக் கும்பல், தாம் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆயுர்வேத சிகிச்சைக்காக வவுனியா வந்ததாகவும் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.