தடைகளைத் தாண்டி வெளியான மெர்சல்!

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி அறிவித்தபடி தீபாவளியான இன்று வெளியானது.

mersal-music-launch-759

தெறி படத்துக்குப் பின்னர் இயக்குனர் அட்லியுடன் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக மெர்சல் படத்துக்காகக் கைகோர்த்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நூறாவது படமான இது, படத்த்தின் தலைப்பு முதல் தணிக்கைக் குழு சான்றிதழ் வரை பல்வேறு தடைகளைச் சந்தித்தது. மெர்சல் தலைப்புக்கு உரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெற்றிபெற்ற பின்னர், படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்று தணிக்கைக் குழு கூறியது. இதனால் திட்டமிட்டபடி மெர்சல் படம் தீபாவளிக்கு திரைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், படத்தை தீபாவளியன்று திரைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் நடிகர் விஜயும், தயாரிப்பு நிறுவனம் தரப்பும் உறுதியாக இருந்தனர்.