84 வயது வயோதிப பெண்ணை 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய பேர்த் நகரிலுள்ள வீடொன்றில் அத்துமீறிப் பிரவேசித்து அங்கிருந்த 84 வயது வயோதிபப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் அங்கிருந்து பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றநிலையில் நேற்றையதினம்(16) சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிபப் பெண் பியோனா ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தலைமறைவாகியுள்ள சிறுவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் தெரிவித்தார்.