கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மூடப்பட்டுள்ளது !!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக,  பல்கலைக்கழக கலைப்பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு  பல்கலைக்கழகத்தின்  கலைப்பீடம்  மூடப்பட்டுள்ளது !!

மாணவ குழுக்களுக்கு இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டார செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த மோதல் சம்பவத்தை அடுத்து, பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மூட பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.