ஓன்பது மாத சிசிசுவை அடித்து கொலை செய்த தந்தை ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மொனராகலை மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி இனோக ரணசிங்கவினால் நேற்றையதினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி புத்தல வகுரவல பகுதியில் ஹிக்கடுவ விதானகே அதீப சஞ்சீவ என்ற ஒன்பது மாதக்குழந்தையினை கால்களில் பிடித்து சுவற்றில் அடித்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக குழந்தையின் தந்தையின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் குறித்த குற்றம் நிருபிக்கப்பட்டதையடுத்து நீதுpமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சேவனகலகம என்னும் இடத்தை சேர்ந்த ஹிக்கடுவ விதானகே அசங்க சஞ்சீவ என்ற 36 வயது நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.