தீயவை அகன்ற இந்த தீப திருநாளில் உறவும், சகோதரத்துவமும் வலுப்பெறட்டும்: கவர்னர் வாழ்த்து

201710010047294862_Panwarilal-Purohit-appointed-as-new-governor_SECVPF
சென்னை:

தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை அறியாமைக்கு எதிரான அறிவின் வெற்றியை குறிக்கிறது. சுய முன்னேற்றத்தை ஏற்படுத்தி தான் என்ற அகங்காரத்தை நீக்குகிறது. தீபங்களின் விழா தீமைகளுக்கு எதிரான வெற்றியை வழங்கட்டும். குடும்ப உறவு மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தட்டும். தூய்மையான, வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி நம்மை வழி நடத்தட்டும்.

தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, வளம் மிகுந்த, பசுமையான தீபாவளி நல்வாழ்த்துக்களை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.