இலங்கையில் புதிய வகை வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
முச்சக்கர மற்றும் மோட்டார் கார்களுக்கு பதிலாக புதிய வாகனம் ஒன்று இலங்கைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக ஏற்படுகின்ற விபத்து காரணமாப வருடாந்தம் பாரிய அளவு உயிர்கள் கொல்லப்படுகின்றனர். பலர் ஊனமுற்ற நிலைக்கு பலர் செல்வதனால் அதற்கு தீர்வாக ஸ்ரீ Quadry Cycle என்ற நான்கு சக்கர வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டினுள் பயணிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகான முச்சக்கர வண்டிகள் காரணமாக ஏற்படுகின்ற விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தில் யோசனை செய்யப்பட்டதற்கமைய இந்த வாகனம் அறிமுகப்படுத்தி வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தொழில்நுட்பத்தில் பொருளாதார ரீதியில் இலாபத்தை பெற்று கொடுக்கும் இந்த வாகனம் தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை இலங்கை வீதிகளில் பயணித்தில் ஈடுபடுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.