பறவைகளுக்காக பட்டாசுகளை மறந்த கிராமங்கள்!

பறவைகளின் குதுகலம்தான் தங்களுக்கு ஆனந்தம் என்று உறுதியாக நம்பும் கிராம மக்கள், அதற்காக ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளைக் கொளுத்தாமல் அமைதியாக, தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.

Capturehrfdஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள வடமுக வெள்ளோடு கிராம எல்லைக்குட்பட்ட வி.மேட்டுபாளையம் , செல்லப்பம்பாளையம், தச்சான்கரை வழி, புங்கம்பாடி ,கட்டையகாடு ,செம்மாண்டம்பாளையம் போன்ற கிராமங்கள் தீபாவளி திருநாள் மட்டுமல்லாது ஊர்திருவிழாக்கள் உள்பட எந்த ஒரு விழாவுக்கும் பட்டாசு வெடிக்காமல் பறவைகளைப் பாதுகாப்பதாக சொல்கின்றனர் ஊர் மக்கள்.