அமெரிக்க விசா லொத்தர் தொடர்பாக மிக முக்கிய அறிவித்தல்.

தொழில்நுட்ப இடர்கள் காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான பல்வகைமைப்பட்ட விசா (Green Card) நிகழ்ச்சி, விண்ணப்பக்காலம்நாளை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

US-Green-Card-Lotteryஇது தொடர்பான அறிவித்தலை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

புதிய நிகழ்ச்சியின்படி, ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2019 பல்வகைமைப்பட்ட விசா நிகழ்ச்சியில் பரிசீலிக்கப்படாது.

இதன்காரணமாக ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் மீண்டும் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதன்படி நாளை ஒக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள விண்ணப்பக்காலம் எதிர்வரும் நவம்பர் நவம்பர் 22ஆம் திகதி இரவு 10 மணிக்கு முடிவடையவுள்ளது.

புதிய பதிவுக்காலத்தில் மற்றும் ஒரு பிரவேச விண்ணப்பம் அனுப்பிவைக்கப்படவேண்டும்.

இந்தநிகழ்ச்சி தொடர்பான அறிவுறுத்தல்களை ஐக்கிய அமெரிக்க ராஜாங்க திணைக்கள இணைத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.