கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த மூன்று பெண்களில் இரண்டு பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயதுடைய வத்சலா பெரேரா மற்றும் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி ஆகிய இருவருமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
காணாமல் போயுள்ள 14 வயதான தமிழ் சிறுமியை கண்டுபிடிப்பதற்கான விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயதான குழந்தையின் தாயான, 19 வயதுடைய வத்சலா பெரேரா அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் தமிழ் சிறுமி ஆகிய மூவரும் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்தனர்.