புதுடெல்லி:
‘பியூ ரிசர்ச் மையம்’ ஒவ்வொரு நாட்டின் ஆட்சி மற்றும் நம்பிக்கை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து பொருளாதாரம் சராசரியாக 6.9 சதவீதம் வளர்ந்துள்ளது என்பதும், 85 சதவீத மக்கள் மத்திய அரசை நம்புகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆனால், பெரும்பாலான மக்கள் ராணுவ ஆட்சியை விரும்புகிறார்கள். அதாவது 55 சதவீத இந்தியர்கள் சர்வாதிகாரத்துக்கு ஆதரவு அளித்து உள்ளனர். ராணுவ ஆட்சியால்தான் நல்லது நடக்கும் என்று 53 சதவீத மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
27 சதவீதம் பேர் இந்தியாவுக்கு வலிமையான தலைவர் தேவை என்று கூறி இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.