கிளிநொச்சி நகரில் தற்பொழுது இராணுத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், அந்த பகுதி இராணுவத்தினரின் முற்றுகைக்குள் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நகரின் வர்த்தக நிலையங்களில் தீபாவளி தினத்தை முன்னிட்டு சிறப்பு வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன.
இந்த நிலையில் பொருட்கள் கொள்வனவில் அதிகளவிலான இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கும் இராணுவத்தினரின் பின்னாள் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், இராணுவத்தினர் மக்கள் நடமாட்டமுள்ள பொது இடங்களில் பிரசன்னமாகியிருப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.