கர்ப்பணி பெண்ணொருவரை காப்பாற்றும் நோக்கில் சாரதியாக செயற்பட்ட வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றுவதற்கு அம்புலன்ஸ் வண்டியின் சாரதியாக வைத்தியர் ஒருவர் செயற்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான நிலையில் பெண்ணை காப்பாற்றும் நோக்கில் ராஜாங்கனய யாய 11 வைத்தியசாலைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அம்புலன்ஸ் வண்டியின் சாரதி இல்லாமையினால் அதன் சாரதியாக செயற்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வைத்தியருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அம்புலன்ஸ் வாகன தொழிற்சங்க ஊழியர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
வடமத்திய மாகாண சுகாதார தணிக்கை பிரிவிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
கயான தில்ருக் என்ற வைத்தியரின் அர்ப்பணிப்பு காரணமாக இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
எனினும் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டியின் சாரதி இல்லாமல் வெளிநபர் சாரதியாக செயற்பட்டு, கர்ப்பிணி பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டமையினால், கோபமடைந்த தொழிற்சங்க தலைவர் மிகவும் மோசமாக செயற்பட்டுள்ளார்.
வைத்தியர், நோயாளியை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கு முன்னரே அவ்விடத்தில் தணிக்கை பிரிவு அதிகாரி வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அதில் இருந்து விழுந்து காயமடைந்த 36 வாரமான தாயார் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் இதய துடிப்பு மிகவும் வேகமாக குறைவடைந்துள்ளமை தொடர்பில் வைத்தியர் கவனம் செலுத்தியுள்ளார்.
மனைவியின் வயிற்றில் 7 வருடங்களின் பின்னர் உருவாகிய குழந்தையை காப்பாற்றுமாறு கோரி அவரது கணவர் வைத்தியசாலையில் மன்றாடியுள்ளார்.
தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்கு உடனடியாக அவரை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என வைத்தியர் தீர்மானித்துள்ளார். இருந்த போதிலும், அம்பியுலன்ஸ் வண்டியின் சாரதி விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் சாரதி இல்லாமல் வைத்தியர் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் வைத்தியர் சாரதியாக செயற்பட்டு தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் அம்பியுலன்ஸ் வண்டியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு வைத்தியர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு முறைக்கேடாக அம்புலன்ஸ் வண்டியை பயன்படுத்தியமை தொடர்பில் வைத்தியர் வெட்கப்பட வேண்டும் என தொழிற்சங்க தலைவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டதனை முறைகேடு என கூறும் மனிதாபிமானமற்ற தாங்களே வெட்கப்பட வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இரண்டு உயிர்களை காப்பாற்றிய அந்த வைத்தியரை பிரதேச மக்கள் பாராட்டியுள்ளனர். எந்தவொரு விசாரணைக்கு முகம் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியரால் காப்பாற்றப்பட்ட தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.