பிரித்தானியாவில் கடந்த வருடத்தில் மாத்திரம் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 500 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அந்த அமைச்சு நேற்று கூறியுள்ளது.
இனம், மதம், பாலியல் உள்ளிட்டவை தொடர்பாக குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது 78 சதவீதமாக உள்ளது. மேலும் வழமை போன்று இடம்பெறும் தாக்குதல், அச்சுறுத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.