இலங்கையர் உட்பட 300 பேருக்கு அமெரிக்காவில் கிடைத்த அதிர்ஷ்டம்!

உலகம் முழுவதிலுள்ள 59 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 300 புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவின் குடிமக்களாக உறுதிமொழி எடுத்துள்ளனர்.

hiஅதற்கமைய இலங்கையர்கள் உட்பட 291 பேருக்கு இவ்வாறு நேற்றைய தினம் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக தங்கள் வலது கைகளை உயர்த்துவதற்கு முன்பு, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அதிகாரியால் அவர்களது தோற்றம் குறிப்பிடும் போது, பல்வேறு வயது மற்றும் கலாச்சாரங்களை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களை நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளளர்.

குறித்த நிகழ்வு இடம்பெற்ற இரவன்று, Elgin பகுதியை சேரந்த ராமநாதன் குமாரசாமி, மகிழ்ச்சியில் உறங்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

84 வயதான அவர் குடியுரிமை கிடைத்தமை உற்சாகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்று குமாரசாமியின் மகள்கள் அவரது சக்கர நாற்காலியைச் சூழ்ந்துள்ளனர், அவர்கள் ஒரு சிறிய அமெரிக்க கொடியுடன் விழாவில் கலந்து கொண்டார்.

“இந்த உணர்ச்சியுடன் என்னால் பேசமுடியாது,” என குமாரசாமி தனது குடும்பத்தினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையரான அவர் 2006ஆம் ஆண்டு டெக்ஸாசில் குடியேறியுள்ள நிலையில் நேற்றைய தினம் அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.