கணவரையும் இழந்து 28 வருடங்களின் பின்னர் தாரய சுகம் விசாரிக்க வந்த கடைசி பிள்ளை தாயை ஏமாற்றி வீட்டினையும் சொத்துக்களையும் உரிமம் மாற்றிக்கொண்ட சம்பவம் ஒன்று பதியபெலெல்ல உடபதியபெலெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பதியபெலெல்ல உட பதியபெலெல்ல பகுதியில் வசித்து வந்த தாய் ஒருவருக்கு ஆறு பிள்ளைகள் அவர்களில் மூவர் ஆண்களும் மூவர் பெண்களுமாவர்.
பிள்ளைகள் சுமார் 28 வருடங்களாக தாயை பார்ப்பதற்கு வராத சோகத்துடன் கூலி வேலை செய்து உயிர் வாழ்ந்துள்ளார்.
கணவரையும் இழந்த நிலையில் தனிமையில் சுமார் 8 வருடங்களாக உடபதிபெலெல்லவில் வசித்த தாயை பார்க்க வருகின்றார் கடைசி மகள்.
வந்ததும் தாயை அரவணைக்கின்றால் வீட்டிற்கு மாபிள் (டைல்ஸ்) பதிக்க வேண்டும் வசதிகளும் குளியலறை நிர்மாணிக்க வேண்டும் என தாயிடம் கூறுகிறாள்.
பின்னர் சிறிது காலத்தின் பின்னர் அவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியிலுள்ள வீட்டிற்கு திரும்புகிறாள்.
சிறிது காலம் ஹோமாகமவிலுள்ள தனது வீட்டில் தங்கிருந்த நிலையில், மீண்டும் தாயை பார்க்க செல்கின்றார் கடைசி மகள்,
தாயை தன்னுடன் வந்து வசிக்குமாறு அழைக்கின்றாள்.
தாயும் மகளுக்கு இதனை இரக்கவுள்ளமா… யோசித்து தனியே புறக்கோட்டை வருகின்றார்.
வந்தவர் தனது கடைசி மகளின் வீடு அமைந்துள்ள ஹோமாகமவிலுள்ள வீட்டிற்கு சென்று வசித்து வந்த நிலையில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்.
சிகிச்சை முடிந்த பின்னர் மகளின் வீட்டிற்கு வந்த 81 வயதுடைய மூதாட்டி பிரிதொரு இடத்திற்கு அழைத்துச்செல்லப்படடு சட்டத்தரணியின் முன்னிலையில் அமரச்செய்யப்படுகின்றாள்.
விழியை உயர்த்தியேனும் பார்க்கமுடியாத மூதாட்டி அதிர்ச்சியில் மகளை பார்க்கின்றார் பின்னர் மகளுடன் வந்த ஆண் ஒருவரையும் பார்க்கின்றார்.
தான் சட்டத்தரணியின் முன் அமரச்செய்யப்பட்டிருக்கின்றேன் என்பதோடு, மகளுடன் தகாத உறவினை பேணும் ஆண் ஒருவரும் வந்திருக்கின்றார் உணர்ந்துக்கொள்கின்றார்.
மனதினை திடமாக்கிக்கொண்ட தாய் அச்சத்தில் குறுகி மௌனித்து போகின்னறார்.
சற்று நேரத்தில் தாய் 8 வருடங்களாக வசித்து வந்த வீட்டினையும் சொத்துக்களையும் தனதாக்கிக்கொள்ளவே அவர் ஹோமாகமவிலுள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அது மாத்திரமின்றி வயோதிபர்களுக்கு வழங்கப்படும் இலவச கொடுப்பனவிற்கான உறுதி பத்திரம் மற்றும் வழங்கப்பட்டிருந்த கொடுப்பனவினை கடைசி மகள் கொள்ளையிட்டு வந்துள்ளார் என்பதனை தாய் அறிந்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடைசி மகள் தகாத உறவுகளை பேணி வந்த ஆணின் அச்சுறுத்தலுக்கு அச்சம் கொண்டு உரிமங்களில் கையொப்பம் இட்டு கையளிக்கின்றார்.
பின்னர் அவர்களிடமிருந்து பிழைத்து மத்துரட்ட காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்கின்றார்.
காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய குறித்த சொத்துக்களுக்கான உரிமம் மாற்றும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் , 8 இலட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உங்களது காணியை மீண்டும் தருவேன் என மகளின் தகாத உறவுக்கு உரித்துடைய ஆண் 81 வயதுடைய தாயை மீண்டும் ஏமாற்ற பிரத்தியேக திட்டமொன்றை வகுத்துள்ளமையும் காவற்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடைசி மகளுக்கு சொத்துக்கள் தாரைவார்க்கப்பட்டால் அவருடனே வசிக்குமாறு ஏனைய ஐந்து பிள்ளைகளும் தெரிவிக்க சொத்துக்கள் கிடைக்குமா என்ற நிலையில் 81 வயதிலும் தனது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.