பெரும்பாலானோருக்கு ஒரு முறை நடைபெறும் திருமணத்தை புரட்சிகரமாக செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். அதன்படி திருமண மண்டபங்களில், கடற்கரைகளில், படகுகளில், அரண்மனைகளில் ஏன் அந்தரத்தில் கூட திருமணங்கள் நடந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அன்டார்டிகாவில் மிகவும் குறைந்த உறை நிலை கொண்ட ஒரு இடத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்துக் கொண்டனர்.
இங்கு வெப்பநிலை எப்போதும் மைனஸ் டிகிரியில்தான் இருக்குமாம். அந்த வகையில் மேற்கண்ட எந்த இடங்களிலும் இல்லாமல் வாகனம் ஓட்டியபடியே திருமணம் செய்துள்ளதை பார்த்துள்ளீர்களா. ஆம். வடக்கு சீனாவின் தியான்ஜின் நகரத்தில் கடந்த 1-ஆம் தேதி ஒரு உணவுக் கடையில் டெலிவரி பாயாக பணியாற்றும் ஒருவர் தனது காதலியை பைக் ஓட்டியபடியே கரம் பிடித்தார்.
அவர்கள் இருவரும் ஒரு பைக்கில் முன்னால் செல்ல, அவர்களுக்கு பின்னால் அந்த மணமகனுடன் பணியாற்றும் நூற்றுக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். இது காண்போரின் கவனத்தை ஈர்த்தது மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் வைரலாகியது. இது உண்மையில் திருமணம்தானா அல்லது உணவு டெலிவரி நிறுவனத்தை பிரபலப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.